என் ஜீவன் கிறிஸ்து
en jeevan kiristhu
என் ஜீவன் கிறிஸ்து தாமே என் ஜீவன் கிறிஸ்து தாமே அதாலே எனக்கு சாவு ஆதாயமாமே நெஞ்சே மகிழ்ந்திரு.
நான் யேகோவா வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக ஜீவித்துப் போவேனே.
பாடெல்லாம் அற்றுப்போகும் என் நோவும் முடியும் என் மீட்பர் புண்ணியத்தால் உயிர்த்தெழுவேனே.
மரணம் அடைந்தோர்கள் க்றிஸ்துவின் ராஜ்யத்தில் எழுந்து கீழ்ப்படிந்து ஜீவன் பெறுவாரே.