என் ஜீவ பயணத்திலே
en jeeva payanathilae
என் ஜீவ பயணத்திலே தேவா உம் பாதமே சரணம் பூலோக மீதினில் நீரேயல்லால் யாரும் துணையில்லையே
1. மண்ணுலக பாவ இன்பங்களும் மாயமாய் மறைந்திடுமே மாறா உம் வாக்குகள் அனைத்துமே நான் நம்பி பின் தொடர்வேன்
2. பலவித சோதனை கஷ்டங்களும் பலமாய் அணுகிடினும் கலங்கின எந்தன் இருதயத்தை அசையாமல் காத்திடுவீர்
3. உந்தன் திவ்விய சந்நிதியிலே பரிபூரண சந்தோஷமே உம் திரு கரங்களின் தழும் பெனக்கு
நித்திய ஆரோக்கியமே 4. உம்மில் என் சந்தோஷத்தை நினைந்தே நிந்தைகள் சகித்திடுவேன் உந்தன் சிலுவையை நான் சுமக்க உம் கிருபை ஈந்திடுமே
5. சீயோனின் சிந்iயை நான் எப்போதும் தரித்திட எனை நடத்தும் மகிமையில் உம்மோடு நான் நிற்கவே தேவா தயை செய்குவீர்