என் ஜெப நேரம் உம்மை தேடி வந்திடுவேன்
en jeba neram ummai thedi vandhiduven
என் ஜெப நேரம் உம்மை தேடி வந்திடுவேன் நான் சோராமல் எப்பொழுதும் ஜெபித்திடுவேன் நான் வாழ்ந்திட வார்த்தைகள் தாருமே நான் ஜெயித்திட வரங்கள் தாருமே -2
1.மாம்சத்தின் பலவீனம் என்னோடு போரிட்டாலும் உம் ஆவியின் வல்லமையால் மேற்கொள்ளுவேன் -2 சரீரத்தை வியாதியின் வாதைகள் அழித்திட்டாலும் சுகம் தரும் வார்த்தையால் பிழைத்திடுவேன் -2
2.சாத்தானின் எதிரான மறைமுக தாக்குதல்கள் என் விசுவாச கேடயத்தின் இரையாகுமே -2 சத்துரு வஞ்சனையாய் என்னிடம் வந்திட்டாலும் உம் வார்த்தையின் கவசத்தால் விரட்டிடுவேன் -2
3.எதிரிகள் சிங்கம் போல் கெர்ச்சித்தாலும் அவன் கெர்ச்சனை காற்றோடு கரைந்திடுமே -2 பகைவன் மாம்சத்தில் பெலன் கொண்டாலும் உம் ஆவியினால் நான் ஜெயம் எடுப்பேன் -2
4.உலகத்தின் கவர்ச்சிகள் கண்முன்னே தோன்றினாலும் அதின் அழகிலே உம் ஞானம் வெளிப்பட்டதே கவர்ச்சியின் இச்சைகள் வாழ்வை அழிக்கின்றதோ கல்வாரி சிலுவையின் காயங்கள் கண்டிடுவீர் -2