என் இரு விழி ஓரம் கண்ணீர்
en iru vizhi oram kanneer
என் இரு விழி ஓரம் கண்ணீர் துளிகள் இறைவா நீ அறிவாய் ஒரு முறை வாழ்க்கை மறுமுறை இல்லை என்பதை நான் அறிவேன் -(2)
கரிகிடும் சருகாய் கவலையில் நானே காரணம் நீர் அறிவாய் மாறிடும் உலகில் மாறாதே வந்து ஒருவரை நான் அறிவேன்
லட்சிய தீபம் காற்றில் தவியாய் தவிக்கிறதே எத்தனை காலம் உம்மிடம் வேண்டி சுற்றினேன் அடைக்கலமாய் -(2) நேரம் கூடவில்லையா வேண்டுதல் கேட்கவில்லையா (2) அனலில் புழுவாய் துடிக்கின்றேன் உம் அருகில் வரவே ஜெபிக்கிறேன் இதுதான் லட்சியமே வேண்டும் அருள் வரமே புயலின் படகில் துடிக்கும் போது அழைக்கும் உம் கரமே
தோல்வியில் துவண்டு சோதனை சுமந்து வாழ்கிறேன் எல்லைக்கடந்த துயரில் நனைந்து பயணம் போகின்றேன் -(2) அழுகுரல் கேட்க வில்லையா ஆறுதல் எனக்கு இல்லையா -(2) கண்ணீர் வற்றி துடிக்கிறேன் உம் காலடி சரணம் ஆகுகின்றேன் இதுதான் லட்சியமே வேண்டும் அருள் வரமே தனிமையில் நானும் தவிக்கும் போது அழைக்கும் உம் கரமே