என் இதயம் நொந்து நொந்து
en idhayam nondhu nondhu
என் இதயம் நொந்து நொந்து போகையிலே என் துணையாய் வந்து வந்து அணைப்பவரே -2
உங்க அன்பு உயர்ந்தது உங்க பாசம் பெரியது -2 என் இதயம்………
தள்ளப்பட்ட கல்லாக தவித்து நான் நிற்கையில தாங்கிட யாருமில்லை -2 தயங்காமல் வந்து தாங்கி பிடித்து நான் இருப்பேன் என்றவரே -2 உங்க அன்பு………
உலகத்தின் மத்தியிலும் உறவுகள் மத்தியிலும் உதறி தள்ளப்பட்டேன் -2 உன்னத தேவனே உம் கரத்தாலே தூக்கி நிறுத்தப்பட்டேன் -2 உங்க அன்பு………
கண்ணீரே படுக்கையாய் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆனதே -2 கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து என்னோடு இருப்பவரே -2 உங்க அன்பு………