என் தேவனே உந்தன்
en devanae undhan
1. என் தேவனே உந்தன் அதிசய வழிகளை என்றும் எண்ணி நித்தமும் உம்மை போற்ற கண்கள் கண்டதில்லை கேட்டறிந்ததில்லையே கண்டிட ஏழைக்கும் தயை செய்தீர்
ஆ! என்ன நேசரின் அன்பிதே என்னைத் தேடி வந்த அன்பிது என்னை பேர் சொல்லி அழைத்த மா தயவே எண்ணி ஸ்தோத்திரங்கள் நான் ஏறெடுப்பேன்
2. காலங்களும் கதை போலவே கடந்து சென்றிட நேசரின் வருகையும் நெருங்க மாறிடா நேசர் வாக்குத்தத்தங்கள் எல்லாம் மாற்றமில்லாத தாய் உண்டெனக்கு - ஆ! என்ன
3. அக்கினியின் அஸ்திரமதை எய்து என் மீது சத்துரு நெருங்கி வந்திடினும் வல்லவர் கரத்தினில் வரைந்திட என்னை அழிக்கும் வல்லமைகள் தொடருமோ - ஆ! என்ன
4. கொடுமையின் மீறல்கள் மோதியே என்னை வீழ்த்த வெள்ளங்களும் சூழ்ந்தே வரும் வேளை வெயிலுக்கும் வெள்ளத்திற்கு ஒதுங்கும் போக்கிடம் ஏழைக்கு மா பெலனும் நீரென்றுமே - ஆ! என்ன
5. ஆலயத்தின் சம்பூரண நன்மையால் நிறைத்தே பேரின்ப நதியை தாகம் தீர்த்தே கர்த்தரின் சமூகத்தில் நித்தமும் மகிழ்ந்தே நான் நீடூழியாய் என்றும் வாழ்ந்திடுவேன் ஆ! என்ன