என் தேவனே நான் உம்மை தேடினேன்
en devanae naan ummai thedinen
என் தேவனே நான் உம்மை தேடினேன் உலகம் முடியும் வரையும் என்னை கை விடமாட்டீர்
எந்தனை அழைத்தவர் நீர் அல்லவோ என்றென்றும் வழுவாமல் காத்திடுவீர் உம்மை நம்பினோர் வெட்கம் அடைவதில்லை பயமேதும் இல்லை நீர் இருக்கையிலே
பாரங்கள் கவலைகள் நெருக்கையிலே பரமனே உம்மையே நோக்கிடுவேன் அன்பு கரத்தால் தாங்கிடுவீர் அண்ணலே உம்மையே துதித்திடுவேன்