என் தேவனே என்றும்
en devanae endrum
1. என் தேவனே! என்றும் மாறிடா இரட்சணிய கன்மலையே! எளியோர்க்கு மறைவிடமானவரே! அளவில்லா கிருபையால் சூழ்ந்தெனையே அனுதினம் காத்ததால் மகிழ்ந்தும் பாடிடுவேன்
எந்தன் மீட்பரே! நல்ல மேய்ப்பரே! என்றும் நல்லவர்! சர்வ வல்லவர்! இன்றும் என்றும் மாறா இயேசுவே! என்றும் என் தஞ்சம் நீரே
2. என் காலங்கள் உந்தன் கிராமத்தில் இருப்பதால் அஞ்சிடேன் நான் எதிர்த்திடும் சத்துருவை வென்றிடுவேன் அதினதின் காலத்தில் சகலத்தையும் அருமையாய் செய்வதால் நன்றியுடன் துதிப்பேன் - எந்தன்
3. புது பெலத்தினால் எந்தன் உள்ளத்தை நிறைத்தீர் உம் ஆவியால் புதியதோர் சிருஷ்டியுமாக்கினீரே பூரண சுவிசேஷம் அளித்திட்டீரே பூரணனாய் உம்மிலே வளர்ந்தென்றும் நிலைத்திடுவேன் - எந்தன்
4. பெரு வெள்ளம் போல் பல நிந்தைகள் பாடுகள் வந்த வேளை குருவே உம் கரத்தில் தாங்கி நீரே இகாமத் இன்னல்கள் இடர் யாவுமே அகமது மாற்றியென்னை மகிமையில் சேர்த்திடும் - எந்தன்
5. பரிசுத்தராய் தங்கள் ஜீவனை பலியாக தத்தம் செய்தோரை சேர்த்திட வருவீரே வான்மீதிலே தரிசிக்க பரிசுத்தமாய் உம்மையே தருவீர் உம் கிருபையே ஒப்புவித்தேன் எனை - எந்தன்