என் தேவனே என்
en devanae en
என் தேவனே! என் அன்பனே! நான் வந்தேன் உம் மகிமையை கேட்டே
1. கானான் தேசமே சேயர்கள் பெறவே கருத்தாயும் கரம் விரித்தீர் கரையோரம் நிற்கையில் கடலையும் பிரித்தீர் காரிருள் மயமாய் நிழலாயுமிருந்தீர் - என்
2. ஆண்டு சாமுவேல் கண்டு நின் மகிமை கொண்டாட செய்தீரே மன்றாடும் அடியேன் கண்டானந்திக்கவே அண்டினேன் குருவே கண்பாரு மெனையே - என்
3. எலியாவின் நாளிலே புலியின் மீதிலே வெளியாக தீ பொழிந்தீர் அழியாது பலமே ஒழியாதும் வரமே மொழியுமும் மனமே அளியுமும்மருளே - என்
4. ஜாதிகள் நடுங்க பாவிகள் அடங்க பாதாளம் நடுநடுங்க ஜெயஞ் சிறந்தெழுந்தீர் சாத்தானுமொடுங்க வந்தேன் என் குருவே நீர் எனக்கிரங்க - என்
5. ஒரு நாள் நீர் என்னில் உம் தயை கூர்ந்து துரை ஒத்தாசை செய்தீரே இந்நாள் நின் கரம் நீட்டும் எனக்கே எந்நாளும் உமையே கொண்டுயர்த்திடவே - என்