என் தேவன் என் பெலனே
en devan en pelanae
என் தேவன் என் பெலனே அவர்; கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே
தீங்கு நாளில் என்னை அவர்; தம் கூடாரம் மறைவில் காத்திடுவார்; (2) தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்;த்திடுவார்; (2)
கர்த்தருக்காய் காத்திடுவாய் அவரால் இதயம் ஸ்திரப்படுமே (2) திட மனதோடு காத்திருந்து அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே (2)
கர்த்தர் எனக்கு பெலனானவர்; யாருக்கு இனி நான் பயப்படுவேன் (2) ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் நான் தங்கிடுவேன் (2)