என் அன்பரே என்
en anbarae en
என் அன்பரே என் இன்பமே இணையில்லா என் தெய்வமே உம் இதயத்தில் ஓர் இடம் தந்திடுமே ஏழை நான் குடி கொள்ளவே
மகன் என்று சொல்ல தகுதி இல்லை வேலைக்காரரில் ஒருவனென்பேன் பரத்திற்கு விரோதமாய் உமக்கு முன் பாய் - நான் பாவம் செய்தேன் என்னை மன்னியும்
உம் சித்தம் செய்ய உம்மோடு இருக்க உதவாக்கரை உணர்த்திடும் தேவா உலகிலே கானா அன்பே உம் பாதம் தஞ்சம் என்று கிடப்பேன்
உம்மண்டை சேரா தடைகள் வந்தாலும் உம்மை பிரிக்க யாராலே கூடும் உலகத் தோற்றம் முன் என்னை நீ தெரிந்தீர் ஐயா - என் இதய துடிப்பை அறிந்தீர் ஐயா
விசுவாசம் என்னில் குறைந்திடும் போது விண்ணக தேவா விரைந்திடுவீர் கரத்தைப் பிடித்திடுவீர் தூக்கி நிறுத்திடுவீர் கன்மலையின்மேல் என்னை நிறுத்திடுவீர்