என் அடையாளம் உம் முகம்
en adaiyaalam um mugam
என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை
1. அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் - 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில்-2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன்
2. உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே - 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் -2 என் நேசரே உம்மை நேசிப்பேன்
3. உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன்- 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே - 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே என் அடையாளம்