என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி
en aayan yesu ennullam thedi
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது ( 2 ) என தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் - 2
பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன் பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் ( 2 ) அருளமுதை ஈந்தார்
கருணையின் அமுதே பவித்திர அழகே காலமெல்லாம் வருவாய் பெருமையின் வேந்தே பேரருட்சுடரே பாசத்தினைப் பொழிவாய் ( 2 ) பாசத்தினைப் பொழிவாய்
அகிலமும் உமதே ஆற்றலும் உமதே ஆண்டவனே எழுவாய் இகமதில் இனிமை பொழிந்திடும் இறைவா இன்புறவே எழுவாய் ( 2 ) இன்புறவே எழுவாய்