என் ஆவியை நான் ஊற்றுவேன்
en aaviyai naan ootruven
என் ஆவியை நான் ஊற்றுவேன் உன் சந்ததியின்மேல் நான் ஊற்றிடுவேன் என் ஆசீர்வாதம் நான் பொழிந்திடுவேன் உன் பிள்ளைகள் மீதே நான் பொழிந்திடுவேன் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
வல்லமை வரங்களை தந்திடுவேன் ஆவியின் கனியால் நிரப்பிடுவேன் எனக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவாய் எனக்கு கனிகள் தந்திடுவாய்
நோய்கள் யாவும் விலக்கிடுவேன் சந்தோஷ வாழ்வு நல்கிடுவேன் பெலவீனம் யாவும் போக்கிடுவேன் புதுபெலன் உனக்கு தந்திடுவேன்
கையின் பிரயாசம் பெருகச் செய்வேன் கடன் தொல்லை யாவும் நீக்கிடுவேன் வறுமையின் நாட்கள் முடிந்து விடும் செழிப்பின் நாட்கள் வந்துவிடும்