என் ஆத்துமம் ஆண்டவரை
en aathumam aandavarai
என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது என் ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது -/2
1.அன்பின் தேவன் அவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன் இரக்கத்தின் கடவுள் அவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன் -/2 அவர் அருகினிலே நான் இருப்பேன்-தினம் அவர் வழி தனிலே நான் நடப்பேன் அவர் வழி தனிலே நான் நடப்பேன் (என்-2)
2.நீதியின் மன்னர் அவர் - அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன் மகிழ்ச்சியின் நிறைவும் அவர் - என் மனதினை மீட்டிடுவேன் -/2 அவர் அருகினிலே நான் இருப்பேன்-தினம் அவர் வழி தனிலே நான் நடப்பேன் அவர் வழி தனிலே நான் நடப்பேன் (என்-2)