என் ஆத்துமாவில் பெலன்
en aathumaavil pelan
என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை அனுதினம் நடத்திடுமே - 2 ஆவி ஆத்மா சரீரமுடன் பரிசுத்தமாய் காத்திருப்பேன்-2
1.விசுவாச ஓட்டத்தை நான் ஜெயமாக ஓடிடவே என்னை அனுதினம் போதித்து நீர் என் பாதையை ஸ்திரப்படுத்தும்
2.கானான் யாத்திரை மிகக் கடினம் அதில் நடத்திட பெலன் வேண்டுமே காலேப் உள்ளில் இருந்து ஆவி என் உள்ளில் தர வேண்டுமே
3.முன் வைத்த காலையும் நான் ஒரு போதும் பின்வைக்காமலே உம் பாதங்கள் தாருமப்பா கொல்கொதா நடத்திடவே
4.அனுதினம் என் சிலுவையுடன் உம்மை பின்பற்றி நடந்திடுவேன் இந்த உலகம் தூசித்தாலும் உம் அன்பில் நிலைத்திருப்பேன்