என் ஆத்துமாவே நீ ஏன்
en aathumaavae nee en
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் தைரியமாயிரு நிமிர்ந்து முன்னேறிச் செல் கர்த்தர் உன்னோடு உண்டு
பயமுள்ள ஆவியைக் தராதவர் பலமுள்ள ஆவியை தந்தாரே நீ ஏன் கலங்குகிறாய்
நீ கண்ணீரோடு இருக்கவா மரித்தாரவர் நீ கவலையோடு இருக்கவா அடிபட்டாரவர் நீ ஏன் கலங்குகிறாய்
இதுவரை நடத்தினவர் அவரே இனியும் நடத்துபவர் அவரே அவர் பாதத்தில் நீ விழுந்துவிடு
உன் உற்றாரை காட்டிலும் மேலானாவரவர் உன் உறவு காட்டிலும் சிறந்தவர் உள்ளங்கையில் உன்னை வரைந்தாரே
ஒரு முழம் கூட்ட முடியுமோ ஒரு முழம் குறைக்கத்தான் முடியுமோ பின்னை ஏன் நீ கலங்குகிறாய்