என் ஆத்துமாவே நீ
en aathumaavae nee
என் ஆத்துமாவே நீ சோர்ந்து போகாதே உன்னை நடத்தும் தேவன் கைவிடவே மாட்டார்
கண்மணிப்போல் உன்னை காப்பார் கரத்தையும் பிடித்து நடத்திடுவார் கண்மணிப்போல் உன்னை காப்பார் கன்மலைமேல் உன்னை நிறுத்திடுவார்
1. எத்தனை நிந்தைகள் எத்தனை பாடுகள் எத்தனை உபத்திரவம் என்று நினைக்கிறாயோ ஒருபோதும் நீ திகையாதே உன்னோடு இயேசு உண்டு ஒருநாளும் நீ கலங்காதே உன்னோடு இயேசு உண்டு
2. எத்தனை தேவைகள் எத்தனை இழப்புகள் எத்தனை பெலவீனம் என்று நினைக்கிறாயோ ஒருபோதும் நீ திகையாதே உன்னோடு இயேசு உண்டு ஒருநாளும் நீ கலங்காதே உன்னோடு இயேசு உண்டு
3. ஏன் இந்த சோதனை ஏன் இந்த வேதனை ஏன் இந்த அவமானம் (தூஷனம்) என்று நினைக்கிறாயோ ஒருபோதும் நீ திகையாதே உன்னோடு இயேசு உண்டு ஒருநாளும் நீ கலங்காதே உன்னோடு இயேசு உண்டு
4. எண்ணங்கள் நிறைவேறல விருப்பங்கள் இன்னும் நடக்கல இன்னும் நானும் என்ன செய்ய என்று நினைக்கிறாயோ ஒருபோதும் நீ திகையாதே உன்னோடு இயேசு உண்டு ஒருநாளும் நீ கலங்காதே உன்னோடு இயேசு உண்டு