என் ஆத்துமாவே நான் உள்ளளவும் நீ
en aathumaavae naan ullalavum nee
என் ஆத்துமாவே நான் உள்ளளவும் நீ கர்த்தரைத் துதித்திடுவாய் - தினமே ஆலோசனை அழிந்து மண்ணுக்குத் திரும்பும் மானிடனை நம்பாதே என்றும்
1. தேவனைத்துணையாகக் கொண்டு அவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பாக்கியவான்
2. ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்பவரும் உண்மையைக் காப்பவரும் அவரே
3. பசியாளிகளையும் பரதேசிகளையும் பாதுகாப்பவர் அவரே என்றும்
4. குருடரின் கண்களைத் திறப்பவரும் கை தூக்கி விடுபவரும் அவரே
5. தலைமுறை (2) சதா காலங்களிலும் ஆட்சி செய்பவர் அவரே என்றும்