என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
en aathumaavae kartharaith thudhi
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி அவர் நாமம் அதிசயமே! அவர் செய்ததாம் உதவிகளை மறவாமலேயே – இயேசுவை வாழ்நாள் எல்லாம் துதி செய்
1. எக்காளத்தைப் போல் சத்தம் உயர்த்தி ஏசுதேவன் இயேசுவைத் துதி பாவம் போக்கி ரோகம் நீக்கித் தூக்கி எடுத்திட்டாரே கரத்தால் தாங்கி அணைத்திட்டாரே
2. பாரில் எந்தனைப் பிரித்தெடுத்து ஜீவப்பாதை செல்லச் செய்தாரே சுத்தனாய் நான் ஜீவித்திட சுத்த ஆவி ஈந்தார் – அவருக்கு சதா துதி ஸ்தோத்திரமே
3. எண்ணிலடங்கா நன்மை அளித்தார் தம்மைத்தாமே எனக்காய் ஈந்தார் சொந்த இரத்தம் சிந்தினவர் இனி என்ன செய்திடார்? எனக்காய் யாவும் முடித்திடுவார்
4. அன்றன்றுள்ள தாம் தேவை அறிந்து நன்றாய் யாவும் அளித்திட்டாரே பதில் என் செய்வேன் ஒன்றும் இல்லை நன்றியால் – துதிப்பேன் அவரை எப்போதும் ஸ்தோத்தரிப்பேன்
5. தந்தை தாய் போலத் தேற்றி அணைத்து எந்தன் பாரம் யாவும் தீர்த்தாரே அலைபோல் சாத்தான் சீறும் போது தூங்காதுகாத்திட்டார் தூதரால் வேலி அடைத்தும் விட்டார்
6. எந்தன் இயேசுவே! உந்தன் அன்பினை என்னை விட்டே பிரிப்பவன் யார்? என்ன தொல்லை நேரிடினும் அன்பரின் கையினில் – பறிக்க யாதொன்றும் இல்லை இல்லை.