என் ஆத்துமாவே ஏன் இந்த பயம்
en aathumaavae en indha payam
என் ஆத்துமாவே ஏன் இந்த பயம் கலக்கம் ஏன் தியக்கம் ஏன் கண்ணீரும் ஏன் இயேசுவின் முகத்தை பார் பேரன்பு வழிகின்றதே -2
1.ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் இருப்பாளோ (2) அவள் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றுரைத்த தேவன் உன்னோடு இருக்கிறாரே
2.இதோ எனது உள்ளங்கைகளில் உன்னை நான் வரைந்துள்ளேன் (2) எனது மதில்கள் என் முன் உள்ளதே என்றுரைத்த தேவன் உன்னோடு இருக்கிறாரே
3.மலைகள் விலகி பர்வதம் பெயர்ந்து குன்றுகள் அசைந்தாலும் எந்தன் கிருபை உன்னோடு இருக்குமே என்றுரைத்த தேவன் உன்னோடு இருக்கிறாரே