என் ஆத்துமாவே என்
en aathumaavae en
என் ஆத்துமாவே என் முழு உள்ளமே உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி
வையகத்தில் உனக்கு மெய்யன் மனமிரங்கி செய்த உபகாரம் மறவாமல்
1. பாவத்திலமிழந்திப் பிணியினால் வருந்திச் சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில் மீட்டுனக்கிரக்கம் கிருபை என்றும் முடியை சூட்டிய கரத்தனை நித்தம் நினைத்து
2. பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார் பற்றிடும் அடியார் முற்றும் பயப்படில் அக்கிரமம் மெல்லாம் கர்த்தன் கருணையால் ஆக்கினையின்றி அகற்றிடுவார்
3. மாமிச மெல்லாம் வாடும் புல்தானே பூவில் வளர்ந்திடில் வயலின் பூவாமே கர்த்தன் கருணைக்குக் கரையென்பதில்லையே நித்தியமாக நிலைத்திடுமே
4. துதித்திடுவீரே துாத கணங்களே ஜோதியாய் உள்ளவர் கோடி சேனைகளே ராஜ்ஜியங்களிலவர் காட்டிய கிரியைக்காய்ச் சாட்சிகள் நாம் துதி சாற்றிடுவோம்