என் ஆத்ம நேசர் இவர்
en aathma nesar ivar
என் ஆத்ம நேசர் இவர், என் கண்கள் காண வாஞ்சிக்குதே
1. வெண்மையும் சிவப்பும் ஆனவரே! வெண்ணங்கி தரித்தவராம் இவரே பொன்னகர் வீதியிலே உலாவும் பொன்முடி வேந்தனாம், என் அரசே
2. பாலில் கழுவப்பட்ட தூயவன் கண்கள் பார்க்கவே எனதுள்ளம் துள்ளிடுதே பரிமள தைலத்தின் நறுமணம் வீசிடும் பதினாயிரம் பேரில் சிறந்தவர் 3. நீதியும் சத்தியமும் உள்ளவர்! நீசனும் என்னை மீட்டவரே நீதியின் சூரியனாய் ஜொலிக்கும் நீதிமான்களின் ராஜாவே!
4. பரிசுத்த தூதர் பரவசத்தோடு பரமனைப் பாடித் துதிக்கின்றாரே, பறந்திடும் பக்தரும் போற்றுவார் பரிசுத்தவான்களின் இராஜனையே.
5. இன்னமும் காணேன் அண்ணல் இயேசு என்னதான் இன்னும் தாமதமா? மன்னவன் சொன்ன தம் வாக்கு எண் எந்நாளும் ஏங்கித் தவிக்கிறேன்.