என் ஆசை எல்லாம் நீதான்
en aasai ellaam needhaan
என் ஆசை எல்லாம் நீதான் ஐயா என் ஏக்கமெல்லாம் நீர்தானையா என் உறவுகள் எல்லாம் நீர்தானையா என் உயிரும் பெலனும் நீர்தானையா
வானங்கள் கொள்ளாத வல்லவரே நித்திய பேரின்பம் அருள்பவரே வாழ்வையே அழகாக்கி ரசிப்பவர் வள்ளலே நீர் மட்டும் என் தஞ்சமே
வாழ்க்கையில் கசப்பு எல்லாம் இனிக்குதையா வானவர் என் இயேசு வந்ததினால் நெஞ்சுக்குள் நீடிக்கும் நிம்மதியே நீர் மட்டும் எந்தன் எதிர் காலமே
இயேசுவே உம் அன்பில் இழுக்கப்பட்டேன் கல்வாரி அன்பிற்கு அடிமையானேன் காலங்கள் மனிதர்கள் மாறினாலும் மாறாத இயேசுவே நீ போதுமே