என் ஆண்டவா பாடுவேன்
en aandavaa paaduven
என் ஆண்டவா பாடுவேன் என் ரட்சகா போற்றுவேன் - (2)
உம் அன்பினால் நீர் என்னை மூடினீர் என் பாவ பாரம் நீக்கினனீர் என் துன்பம் யாவையும் இன்பமாய் மாற்றினீர் சந்தோஷத்தாலே நிறைத்தீர்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் என் நேசரே என் அன்பரே - (2)
கண்ணீரின் பாதையில் காரிருள் வேளையில் நான் கலங்கி நின்ற நேரத்தில் என் மரண பாதையில்
வியாதியின் வேளையில் என்னைக் காத்து மீட்டுக் கொண்டீரே
உள்ளத்தின் பாரங்கள் எனை சூழ்ந்த நேரத்தில் துணையாய் என்னோடு நின்றீரே நான் தனியாய் நிற்கையில் மனம் துவண்டு போகையில் என்னை உயர்த்தி மகிழ செய்தீரே