என் ஆதரவு கோலே
en aadharavu kolae
என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரே என் அழகான பட்டணம் நீரே
மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதே உங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவே உங்களோடு பேசுவே
உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களையே பாடுவே உம்ம மட்டும் பாடுவே
உலக நன்மையோ என்ன விட்டு போகுதே உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவே உம்ம மட்டும் நாடுவே