எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா
emmai umadhu karuviyaay maatridu devaa
எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா ( 2 )
1. உள்ளம் உடைந்தவர் உருக்குலைந்தவர் உமதாற்றல் பெற்றிட வேண்டும் உறவை இழந்தவர் ஒதுக்கப்பட்டவர் உன் துணையில் எழுந்திட வேண்டும் இருளினை அகற்றவும் விலங்கினை உடைக்கவும் - நீதி நேர்மை உணர்வு ஓங்க நிம்மதியே வாழ்வில் தொடர் எம்மை உமது கருவியாக்கும்
2. மனித நேயங்கள் மதிக்கும் பண்புகள் மனதில் தினம் வளர்த்திட வேண்டும் இறைவன் வார்த்தையில் இனிதோர் ஆட்சியை இம்மண்ணில் கட்டிட வேண்டும் ! பிரிவுகள் நீங்கவும் ஒற்றுமை ஒங்கவும் - 2 உண்மை அறிவு என்றும் வாழ உரிமை வாழ்வு நிறைவு காண எம்மை உமது கருவியாக்கும