எல்ரோயீ நீர் என்னை
elroyee neer ennai
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன் நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2 உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன் நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன் நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
உமக்கே ஆராதனை-3 நீர் என்னை காண்பவரே உமக்கே ஆராதனை-3 நீர் எந்தன் எல்ரோயீ
1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2 (தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே ஆனால் உம் அன்போ மாறாததே-2
2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2 நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்-2
நீரே என்னை காண்கிற தேவன் நீரே என்னில் வாழ்கிற தேவன் நீரே என்னை உயர்த்திடும் தேவன் எந்தன் எல்ரோயீ..... ஆராதனை ஆராதனை ஆராதனை எந்தன் எல்ரோயீ.....