எல்லோருக்கும் நல்லவரு
ellorukkum nallavaru
எல்லோருக்கும் நல்லவரு இயேசு தானுங்க அவரை ஏற்றுக் கொண்டா வாழ்க்கையில இன்பம் தானுங்க
தந்தானானே தந்தானானே தானே -(2)
சமாதானம் தருபவரு இயேசு தானுங்க நமக்கு சந்தோஷம் தருபவரும் இயேசு தானுங்க பாவங்கள் போக்குவதும் இயேசு தானுங்க நம்மை பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க -(2)
குறைவுகளை நீக்குபவர் இயேசு தானுங்க நம்ம கஷ்டங்களை தீர்ப்பு வரும் இயேசு தானுங்க கைவிடாமல் காப்பவரும் இயேசு தானுங்க நம்மை கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க -(2)
சோதனையை மாற்றுபவர் இயேசு தானுங்க எல்லா சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க தோல்விகளை மாற்றுவது இயேசு தானுங்க நம்மை தாழ்விலிருந்து எடுத்தவரும் இயேசு தானுங்க-(2)