எல்லையில்லா கிருபை
ellaiyillaa kirubai
எல்லையில்லா கிருபை என்னைச் சூழந்து கொள்ளும் இந்தப் புதிய நாளில் உமது அருளைப் பொழியும்
மனிதன் கதவை அடைத்தால் என் தேவன் அதையே திறப்பார் மானிட (மனித) உள்ளங்கள் மாறும் என் நேசர் என்றும் மாறார்
பூர்வ நாளை நினைத்தேன் உம் புண்ணிய செயலை உணர்ந்தேன் எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன் என் இயேசுவை என்றும் மறவேன்
நெஞ்சம் நொந்த போது தஞ்சம் தந்த தேவன் நான் வாடி நின்ற போது என்னைத் தேடி வந்த தேவன்
வீசும் புயலின் நடுவில் கலங்கும் வாழ்க்கைப் படகில் இயேசு துணையாய் வருவார் என்னைப் பாசமோடு காப்பார்