எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டு
ellaavatrilum devan nammodu undu
எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டு எல்லாவற்றிலும் பரனை ஸ்தோத்திரம் செய்வோம்.
1. பூமி மலை யாவுமே நிலை மாறினாலுமே நேமி நாயகன் நமக்கு நல்ல அடைக்கலமே.
2. வெள்ளம் போன்ற துன்பமும் கடக்க நேரிட்டாலுமே வல்ல பரன் கூட உண்டு வேண்டும் சகாயம் செய்வார்.
3. அக்கினியில் நடக்கும்போதும் வேகாதிருப்பாய் அக்கினி ஜூவாலை உன் பேரில் பற்றாதென்றாரே.
4. பஞ்சம் படையாகிலும் பயங்கரமாகிலும் அஞ்ச வேண்டாம் கிஞ்சிதமும் யேசுபரன் தஞ்சமே.
5. என்ன ஆபத்தானாலும் யார் என்ன பேசினாலும் என்னாண்டவர் கூட உண்டு யார் எனக்கு எதிரி?
6. கவலைகள் வந்தாலும் கஷ்ட நஷ்டம் ஆனாலும் கலங்க வேண்டாமே யேசு கர்த்தர் துணை செய்வாரே.
7. வீட்டார் விரோதித்தாலும் வியாதி பிணி வந்தாலும் கைவிடாரே யேசு நாதர் கடைசி வரையிலும்.
8. அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவர்க்கு;தோத்திரம் அல்லல் எல்லாம் தீர்க்கும் பரா அல்லேலூயா ஸ்தோத்திரம்.