எல்லாமே நீர் இயேசுவே
ellaamae neer yesuvae
எல்லாமே நீர் இயேசுவே எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2 பொல்லாதவனாய் நான் இருந்தாலும் பொல்லாப்புக்கு விடுவதில்லை
மகனாய் ஏற்றுக்கொண்டீரே இராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே
1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும் என்னை தேடி வந்து அரவணைத்தீரே கரிசனையானவரே- நீர் கருணை உள்ளவரே-2
2.எல்லாவற்றையும் நான் இழந்தேனே எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர் (உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள (அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2