எல்லாம் தம் திவ்ய
ellaam tham thivya
1. எல்லாம் தம் திவ்ய வல்லமை யாம் - முற்றும் சொல்லரும் வல்ல உயிர்ப்பிக்கும் செயலே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பரிவோடு அருள் செய்வதாமே
உயிர்ப்பிக்கும் வல்லமையே - நம்மை உயிர்ப்பிக்கும் வல்லமையே நிறைவான ஜீவனிதே - ஏது. மரித்தோரை உயிர்ப்பிக்கும்
2. வாராய் மரித்தேனே நீ வெளியே என உரைத்ததோர் வல்ல இயேசுவின் சத்தம் மரணத்தின் மாவினை முய்த்திடுமே கருணையின் செயல் இதுவே - உயிர்
3. மேவி கிறிஸ்துவை மரித்தவரின் - நின்றே ஆவியால் மீண்டும் உயிர்பித்த அவரே திரு ஜீவனாம் இந்த அபிஷேகத்தின் நிறைவாலே உயிர்மீட்சி செய்வார் - உயிர்
4. கிறிஸ்து இயேசுவின் பிரசன்னத்தால் - மாறா கிருபையே முற்றும் வெளியாக்கி அதினால் பகர்ந்தார் ஜீவனை சுவிசேஷத்தில் தகர்த்தென்றும் சிலுவையில் சாவை - உயிர்
5. சீயோன் தன் ஜீவ கிரணங்களே - வல்ல ஜீவனின் மிக்க பூரணம் தனிலே நிறைவோமே ஜீவன் அழியாமையில் மறைவோமே மறுரூபராகி - உயிர்