எல்லாம் சிஷ்டித்
ellaam sishtith
1. எல்லாம் சிஷ்டித்த நமது தயாபர பிதாவுக்கு அநந்த காலமாக அல்லேலூயா! மகத்துவம் , பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக ; பார்ப்பார், காப்பார் வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும் அவர் செய்கையால் விளங்கும்.
2. மண் நீசருக்கு மீட்பரும் கர்த்தாவுமாம் சுதனுக்கும் ரட்சிப்பின் அன்புக்காக , அல்லேலூயா ! புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும் உண்டாய் இருப்பதாக ! பாவம், சாபம் எந்தத் தீங்கும் அதால் நீங்கும், என்றென்றைக்கும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.
3. மனந்திருப்பி எங்களை பர்த்தாவாம் இயேசுவண்டையே அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும் தேவாவிக்கும் , அல்லேலூயா ! புகழ்ச்சியும் வணக்கமும் உண்டாக; வான, ஞான வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார் , அதின்முன் ருசியைத் தாறார் .
4. எல்லா சிஷ்டிகளாலேயும் பிதா குமரன் ஆவிக்கும் அநந்த காலமாக , அல்லேலூயா ! மகத்துவம் , பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக ; ஆமேன், ஆமேன் ! நீர் அநந்தம் , ஆதியந்தம் , பரிசுத்தம் , பரிசுத்தம், பரிசுத்தம் . ஆமேன் .