எல்லாம் கூடுமே எல்லாம்
ellaam koodumae ellaam
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே _(2) என் இயேசு ராஜன் பெயரை சொன்னால் எல்லாம் கூடுமே
எவ்வளவாய் எதிர்த்தாலும் எவ்வளவாய் தடுத்தாலும் இயேசு ராஜன் புகழ்தனையே அழிக்க முடியாது இயேசு ராஜன் புகழ்தனையே ஒழிக்க முடியாது
கானா ஊரினில் கல்யாண வீட்டினில் இயேசுவும் வந்தார் அற்புதம் நடத்தினார் தண்ணீர் ரசமாய் மாறின அதிசயம்
பனிரெண்டு வருஷமாய் பெரும்பாடுள்ளவள் இயேசுவை தொட்டால் அற்புதம் நடத்தினார் வஸ்திர வல்லமையால் சுகத்தை பெற்றாள்
முப்பத்தெட்டு வருஷமாய் வியாதியாய் கிடந்தான் இயேசுவும் வந்தார் அற்புதம் நடந்தது படுக்கையை எடுத்து எழுந்து நடந்தான்