எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
ellaam konarndhom thiruvadi vaithom
எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம் ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய் தலைவா ( 2 )
அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது ( 2 ) வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் மகிழ்வுடன் நீ தந்தது ( 2 )
சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள் எல்லாம் நீ தந்தது ( 2 ) உடல் பொருள் ஆவி உணர்வுகள் எல்லாம் உவப்புடன் நீ தந்தது