எல்லா மகிமைக்கும்
ellaa magimaikkum
எல்லா மகிமைக்கும் பாத்திரரே எல்லா கனத்திற்கும் உரியவரே உந்தன் மேலான நாமம் என் வாழ்வில் போதும் என் குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
உம் நாமத்தினால் நான் கேட்கின்ற யாவையும் தாமதம் இன்றி தருபவரே நான் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் என் வாழ்வில் செய்பவரே
என் உதடுகளில் தோன்றும் வார்த்தைகளை தோன்றும் முன்பே அறிபவரே என் விருப்பங்களை உம் விருப்பம் என்று விரும்பியே என் வாழ்வில் தருபவரே
என் பாதைகளில் தோன்றும் வாதைகளின் சேதங்கள் அணுகாமல் காப்பவரே உம் சேனைகளால் உந்தன் ஆணைகொண்டு தீதென்னை தீண்டாமல் நிறைப்பவரே.