எல்லா மகிமை உமக்குத் தான்
ellaa magimai umakkuth thaan
எல்லா மகிமை உமக்குத் தான் ஐயா எல்லா துதிகள் உமக்குத் தான் ஐயா (2)
காலமெல்லாம் காத்தீரே கண்மணி போல் காத்தீரே கவலைகள் மாற செய்தீரே ஐயா
எந்தன் நீதியே அழுக்கான கந்தையே பரிசுத்தமாக்கி விட்டீரே ஐயா
தகுதிகளை ஏதுமில்லை தள்ளப்பட்ட கல்லு நான் எடுத்து நிறுத்தி நீர் ஐயா
தாழ்மையில் தெரிந்து கொண்டு தயவாய் நடத்தி வந்திர் தோல் மேல சுமந்து கொண்டீரே ஐயா