எளியவன் என்னை குழியில்
eliyavan ennai kuzhiyil
எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர் சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர் புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர் விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்
நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே எந்தன் துணையை..... உமக்கில்லை இணையே இணையே இணையே எந்தன் கன்மலையே-2
1.உம்மால் பிறந்த நானும் இந்த உலகை வெல்லுவேன் உம்மைப்போலவே பேசியே இந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன்
2.உந்தன் வார்த்தையை பிடித்து நான் உயரமாக வளர்வேன் உந்தன் சத்தம் கேட்டு நான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன்
புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே தலை உயர்த்தினீரே என்னை நினைத்து அழைத்து கொடுத்தீர் புது ஜீவன் என் தலையை நீர் அபிஷேகித்தீர் என் கன்மலையே துதித்திடுவேன் கொடுத்திடுவேன்.... நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே....
3.தாயை போல் என்னை அணைத்து தம் ஜீவன் தந்து காத்தீர் தந்தை போல் தோளில் சுமந்து மாறா அன்பினாலே சேர்த்தீர்-2-நீர் எந்தன்