எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
ekkaalamum sthotharippen
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் -2
நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே -2 உம்மை ருசித்தேன் நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு -2
1. காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே -2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே -2 - நீர் செய்ததை
2. தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே -2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே -2 -நீர் செய்ததை