எக்காலம் யேசுவே க்ருபை கூரும்
ekkaalam yesuvae krubai koorum
1. எக்காலம் யேசுவே! க்ருபை கூரும் அன்பான சத்தத்தால் ஏக்கம் நீக்கும். எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.
2. எப்போதும் யேசுவே! என்னோடிரும் சோதனையில் வெற்றி தந்து காரும். எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.
3. எக்காலம் யேசுவே! கஷ்ட வாழ்வில் அன்பாகத் தங்குவீர் நீச நெஞ்சில். எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.
4. எப்போதும் யேசுவே! இப்பேதைக்கு மெய்ஞானம் சத்தியம் நன்கு ரூடவ்யும். எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.
5. எக்காலும் யேசுவே! கேடு நீக்கும் காருண்ய நாயகா என்னை ஆளம். எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.