எக்காளம் தொனிக்க இயேசு வந்திடுவார்
ekkaalam thonikka yesu vandhiduvaar
எக்காளம் தொனிக்க இயேசு வந்திடுவார் எண்ணில்லா தூதர்கள் சூழ்ந்திடவே என்ன பேரானந்தமே ! அன்று
1.மரித்த பக்தர்கள் மகிமையாய் எழும்பி மன்னன் இயேசுவோடு சேர்வார் பாரினில் பல பாடுகள் பட்ட பரிசுத்தர் பறந்தே போவார்
2.கண்ணிமை பொழுதில் மருரூபமாகியே விண்ணில் மறைந்திடுவோமே மத்திய வானில் சுத்தர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடிடுவோம்
3. காலையோ மாலையோ வருவார் எவ்வேளையோ நாளையாரும் அறியோமே இன்று வந்தாலும் சென்றிட நாமும் இகத்தில் ஆயத்தம் கொள்வோமே
4.கர்த்தரைக் கண்டிட கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் மாறிக் களிப்போமே இன்னல் துன்பங்கள் யாதும் அங்கில்லை இளைப்பாறுதல் பெற்று வாழுவோம்