எக்காள தொனி கேட்குது
ekkaala thoni ketkudhu
எக்காள தொனி கேட்குது நேசர் வருகை நெருக்கமாகுது ஆயத்தமா என்று அழைக்குது அந்த நாள் சமீபமாகுது
வானம் பூமி மாறிப்போனாலும் வல்லவரின் வாக்கு மாறாதே வருவேன் என்று வாக்கு பண்ணி வானலோகம் ஏறிச் சென்ற வானவர்க்காய் காத்திருப்போமே
கண்ணிமைக்கும் நேரத்திலே விண்ணுலகம் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கு இல்லை கஷ்டப்பாடு அங்கு இல்லை கர்த்தரே எவெளிச்சமாவார்
வரும் வேளை தெரியாததால் அருள்பெற ஜெபித்திடுவோம் கர்த்தர் சித்தம் செய்து நாம் காத்திருந்து துதித்து நாம் பரமனோடு வாழ்ந்திடுவோம்
புதிய வானம் புதிய பூமியும் இறங்கி வரும் நேரத்திலே மணவாட்டியாய் வீற்றிருப்பேன் மணம் புரிய காத்திருப்பேன் மணவாளன் நம் இயேசுவையே