எஜமானனே என் இயேசுவே
ejamaananae en yesuvae
எஜமானனே என் இயேசுவே உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2 சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும் உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே
1.தாய் கூட உன்னை மறந்து போகலாம் சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2 ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2 ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே
2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம் உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2 தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2 என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே