ஏகோபித்துச் சேர்ந்திடுவோம
egobithus serndhiduvoma
1. ஏகோபித்துச் சேர்ந்திடுவோம் கர்த்தாவில் ஆனந்திக்கவும் விசாரம் விட்டோய்ந்திடுவோம் கெம்பீரித் தாராதிக்கவும். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!
2. பராபரன் மெய் வஸ்துவாம்! ! தயாபரர் ஆண்டவரே வந்தார் இவ்வையகத்தில் ஆம்! ரட்சிக்க வல்லவரே. செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!
3. பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம் ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!
4. தரித்தரமே ஆயினும் சந்தோஷம் விடாதிருப்போம் மா கல்வி இல்லாவிடினும் ஓயாமலே ஸ்தோத்தரிப்போம். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!
5. ஏகோபித்துப் பாடிடுவோம் மகோற்ச வானந்தத்தினால் சத்யேகரைப் போற்றிடுவோம் கெம்பீர சங்கீதத்தினால். செய்வோம்! செய்வோம்! ! சத்யேகரைத் துதி செய்வோம்!