ஏகோபித்து பாடிடுவோம்
egobithu paadiduvom
1. ஏகோபித்து பாடிடுவோம் இம்மானுவேலின் நாமத்தை ஏத்திடுவோம் துதி சாற்றிடுவோம் இன்னொரு புதியாண்டு ஈந்ததினால்
அல்லேலூயா! அன்பருக்கே ஆனந்த நாதங்கள் ஏறெடுத்து ஆவலுடன் துராம்வரை ஆர்ப்பரிப்போம் நன்றியால் நிறைந்து
2. பர்வதம் மாறினும் குன்றுகளும் தன்னிலை விட்டகன்றேகிடினும் மன்னா நின் கிருபை என்னை விட்டு மாறிடா தென்றும் தற்காத்ததினால் அல்லே
3. கொண்டல் எழுந்தலை மோதிடவே கண்டமிழ்ந்த சீஷன் பேதுருவை மீண்டெடுத்த அன்பின் விண்கரத்தை வேண்டி நின்றே துதி பாடிடுவோம் - அல்லே
4. மாராவின் நீரை மதுரமாகும் மாபெரும் வல்லமையால் நிறைத்தே காசினியில் கசப்பா என்னை தேனே இனிமை செய் தற்பரனை - அல்லே
5. வெள்ளமாய் நிந்தைகள் ஏறி எமை மேல் விழுந்தே அழிக்காமல் இன்ப உள்ளமதில் வைத்து காத்த அன்பின் வள்ளலாம் இயேசுவை வாழ்த்திடுவோம் - அல்லே
6. எக்காள த்தின் தொனி தான் முழங்க எண்ணிலா தூதர்களோடு வரும் மன்னவன் இயேசு தன் முகத்தின் மா மகிமை அன்று நாம் பெறுவோம் - அல்லே