ஏகிடுவேன் சியோன் நகர்
egiduven siyon nagar
ஏகிடுவேன் சியோன் நகர் இயேசுவை நோக்கி கொண்டு
ஏதுமில்லா ஜீவியத்தில் ஏகோபித்து என்றென்றுமே - ஏகி
1. பாரமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு பாரினில் முன்னோடி சென்ற பக்தர்களின் பாதை சேர்ந்து - ஏகி
2. சத்திய மரைக்கசைத்து நீதியை மார்பிலிழைத்து சத்துருவினம்பைத் தடுக்க தரித்து விஸ்வாசத்தையும் - ஏகி
3. ஆயத்தத்தைப் பாதமிட்டு ஆவியின் பட்டயமெடுத்து அண்ணலீந்த ரட்சண்யத்தை ஆவலாய்த் தலைக்கணிந்து, - ஏகி
4. தண்ணீர்த் தடாகமுண்டு தாவியோடும் நதிகளுண்டு தாகமடைவோ ரெல்லாம் தாராளமாகப் பெருகிடவே - ஏகி
5. சிங்கம் புலி கரடி சீறும் துஷ்ட மிருகமங்கே சென்றிடவோ மார்க்கமில்லை செல்லுவோமே தீவிரமாய் - ஏகி
6. தீட்டுள்ளவன் செல்லாத ஓர் திவ்யமான பாதை இது. தீவிரமாக சென்றிடுவோம் தூயரெல்லாம் ஆனந்தமாய் - ஏகி