ஏகமாய் இயேசுவின்
egamaay yesuvin
ஏகமாய் இயேசுவின் நாமத்தை புகழ் ஏற்ற தருணமிதுவே வல்ல தேவனை துதிப்போம்
1. பாவத்தில் ஆழ்ந்த பாவியாம் எம்மைப் பண்புடன் பாலியல் மிட்டனரே பாடுவோமே நாம் பரமனின் செயலைப் பார்தல் மீதினிலே - ஏக
2. காலா காலங்கள் கர்த்தரின் பெலமும் கருணை கரம் காத்ததுவே காதலனீந்தார் பரிசுத்த ஆவி கனிவாய்ப் பாதை செல்ல - ஏக
3. உன்னத அழைப்பு உயர்வதை உவந்தே உலகில் வசிப்போம் உண்மையின் ஊழியம் செய்வோம் ஊக்கமுடன் உள்ளம் உருகிடுதே - ஏக
4. பரிசுத்தமாக பாரினில் வாழ பரம ன் கிருபை பகர்ந்தன ரே தூதரும் காணாத் தூய நற்பணியைத் துங்கன் ஈந்திட்டாரே - ஏக
5. பணிந்திடுவோம் திரு சித்தம் செய்ய திரு மா முறையின் முறைப்படியே ஏத்துவோம் நாம் உன்னதர் பெயரை என்றென்றுமாய் நினைந்தே - ஏக