ஈசாயின் அடிமரமே
eesaayin adimaramae
ஈசாயின் அடிமரமே நேசா நீர் அதன் கிளையே ஏசாயா உரைத்திடும் மெய்ப்பொருளே ஏதென்று அறிந்திடுவோம்
திகழும் ஜோதி தவழும் காட்சி புகழ் நற்செய்தியே மகிழ்ச்சி ஏக புதல்வன் தேவகுமாரன் இயேசு கிறிஸ்திவரே
யூதாவின் பால சிங்கம் நாதா உம் நாமமோங்கும் யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம் யார் என்று விளம்பிடுவோம்
தாவீதின் ஊர்தனிலே தாயார் மரி மகனே வான பரன் பிறந்தார் அதனை வாரும் சென்றுரைத்திடுவோம்
வானோர் பராபரனே ஏனோ வந்தார் புவியே பாவியின் அடைக்கலமாய் உதித்தார் பாரும் நாம் வணங்கிடுவோம்
ஆலோசனைக் கர்த்தரே அதிசயமானவரே கர்த்தத்துவம் அவர் தோளிலுண்டே கண்டே இன்றுணர்ந்திடுவோம்
செங்கோலும் யூதாவிலே மங்கி மறைந்திடாதே சமாதான கர்த்தர் வருமளவும் சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்