எது வேண்டும் உனக்கு இறைவா
edhu vendum unakku iraivaa
எது வேண்டும் உனக்கு இறைவா - 2 எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா - 2 எது வேண்டும் - 4 மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன் உனக்கது மணமில்லையோ
கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன் உனக்கது சுவையில்லையோ எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா - 2 எளிய என் இதயம் தந்தேன் - 2 அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா
பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன் உனக்கது ஈடில்லையே உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன் உனக்கது இணையில்லையே எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா சின்ன என் இதயம் தந்தேன் - 2 அது சிறப்பாய் இருக்குமோ இறைவா